X

தினகரனின் 20 ரூபாய் டோக்கன் இனி செல்லாது – அமைச்சர் தங்கமணி

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தலில் டிடிவி தினகரனின் 20 ரூபாய் டோக்கன் செல்லாது, என்று அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, “மத்திய அரசின் உதய் திட்டத்தில் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக இருக்கிற கோரிக்கையை நீக்கப்பட்டபிறகு தான் அந்த ஒப்பந்தத்தில் இணைந்தோம். எனவே, இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

மழை தொடர்பாக விடப்பட்ட ரெட் அலர்ட் சம்பந்தமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து துறை சார்பில் கூட்டம் நடத்தினார்.

அதுபோல் மின்வாரியம் சார்பில் எனது தலைமையில் தலைமை செயலகத்தில் நாளை கூட்டம் நடைபெறுகிறது.

டி.டி.வி.தினகரன் விரக்தியின் விளிப்பிற்கே சென்று விட்டார். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைதேர்தலில் அவருடைய 20 ரூபாய் டோக்கன் செல்லாது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எங்களிடம் தினகரன் தான் கட்சியை அ.தி.மு.க.வுடன் இணைப்பதாக தூதுவிட்டார். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.

நேரம் வரும்போது தினகரன் தூதுவிட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். அ.தி.மு.க.ஏற்றுக் கொள்ளாததால் விரத்தியின் விளிம்பில் தங்க தமிழ்ச்செல்வன் உளறுகிறார். ஓற்றுமையாக உள்ள முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை பிரித்தாளும் சூழ்ச்சியை தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மூலமாக மேற்கொண்டார்.

ஆட்சியில் இல்லாத போதும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வெளியே ஓட்டல் கட்டி வரும் அவர் தான் ஊழல் செய்துள்ளார். இப்போது ஊழல், ஊழல் என்று சொல்கிறார். ஊழலுக்கு தலைவரே அவர் தான்.

மு.க.ஸ்டாலின், நாங்கள் காற்றாலையில் முறைகேடு செய்வதாக கூறி வருகிறார். நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. இது சம்பந்தமாக அவர்கள் வழக்கு தொடர்ந்தால் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன்.” என்று தெரிவித்தார்.