இந்திய அணியின் டெஸ்ட் வீரர்களுக்கு பயிற்சி – ஆஸ்திரேலிய விரைந்த சஞ்சய் பாங்கர்

இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. நாளை டி20 தொடர் தொடங்குகிறது. அதன்பின் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. 2-வது போட்டி 14-ந்தேதி பெர்த்திலும், 3-வது ஆட்டம் மெல்போர்னில் 26-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதியும் நடக்கிறது.

டி20 அணியில் இடம்பெறாத டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடினார்கள். இவர்கள் தற்போது சிட்னி வந்துள்ளனர். டி20 போட்டி நாளை தொடங்கினாலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக அவர்கள் ஐந்து நாட்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.

அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சஞ்சய் பாங்கர் சிட்னி செல்கிறார். பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி போன்றோருக்கு பாங்கர் பயிற்சி அளிக்க இருக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools