தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் நேற்று இரவு மழை பெய்தது.
மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக சென்னையில் தூத்துக்குடி செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.