காஷ்மீரில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் – ராணுவம் தொடர் தாக்குதல்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி அளித்து வருகின்றனர்.
அதேநேரத்தில் மழைக்காலத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்கின்றனர். ஐம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் அருகே சாகூ அரிசால் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்த முழு விவரங்கள் வெளியாகாத நிலையில், இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தி வருவதாக இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.