ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ரூ.543 கோடியில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், 2.0 படம் விரைவில் தமிழ்ராக்கர்ஸில் வெளியாகும், நவம்பர் மாத ரிலீஸ் என்று சினிமா படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ்ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சர்கார் படத்தையும் படம் ரிலீஸான அன்றே வெளியிட்டு படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்தது. இந்த நிலையில், 2.0 படமும் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.