தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் – அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

கஜா புயல் நிவாரணத்திற்காக தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார் இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்திற்கு உடனடியாக மத்திய குழுவை அனுப்புவது, பிரதமர் தமிழகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகிறது.

கஜா புயல் நிவாரணப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஓரிரு நாளில் இயல்பு நிலை திரும்பிவிடும்.

தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு அளிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எதிர்க்கட்சிகள் எப்போதும் குறை சொல்லாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்தேசம் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. சுனாமி தாக்குதலை விட கஜா புயலால் ஏற்பட்ட சேதம் அதிகமாக உள்ளது.

முதல்வர் தனது சொந்த பிரச்சனைக்காக இல்லாமல் மக்கள் பிரச்சனைக்காகத்தான் ஹெலிகாப்டரை பயன்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools