ஸ்மித், வார்னர் ஆகியோரது தடை நீடிக்க வேண்டும் – மிட்செல் ஜான்சன்
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான் கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதற்கு மூளையாக செயல்பட்டது வார்னர் என்றும், இந்த விவகாரம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரியும் என்று விசாரணையில் தெரிய வந்தது.
இதனால் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு தடையும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும் விதித்தது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம். ஸ்மித், வார்னர் இல்லாமல் ஆஸ்திரேலியா தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் இருவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இதுகுறித்து இந்த வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மூவரின் தடைக்காலத்தை குறைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர்கள் உள்ளூர் தொடரின் கடைசி ஆட்டத்தில் விளையாட முடியும் என்று கிரிக்கெட் நிருபர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார்.
அதற்கு முனன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் பதில் ட்வீட் செய்திரந்தார். அதில் ”மூன்று வீரர்கள் தடை பெற்றிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தண்டனை குறைக்கப்படும் என்ற செய்தி முன்னோக்கிச் சென்றால், பான்கிராப்ட் தண்டைனை குறைக்கப்படும் அளவிற்கு ஸ்மித் மற்றும் வார்னரின் தண்டனை குறைக்கப்படலாம். மூன்று பேரும் அவர்களுடையை தண்டனையை ஏற்றுக் கொண்டார்கள். அதை எதிர்த்து முறையீடு செய்யவிலலை. ஆகவே, தடைக்காலம் தொடர்ந்து நீடிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.