அமைச்சர் பதவி கேட்டு வந்த எம்.எல்.ஏ-க்களை சந்திக்க மறுத்த சித்தராமையா
கர்நாடக மந்திரிசபையில் இன்னும் 7 இடங்கள் காலியாக உள்ளன. அதில் 6 இடங்கள் காங்கிரசுக்கும், ஒரு இடம் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கும் சேர்ந்தவை ஆகும். மந்திரிசபையில் தனக்கான காலி இடங்களை நிரப்ப காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் மந்திரி பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியில் மூத்த எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
புதிய மந்திரிகளை நியமிக்கும் விஷயத்தில் சித்தராமையாவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அவர் கை காட்டும் எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் மந்திரி பதவியை கேட்கும் நோக்கத்தில் சித்தராமையாவை பார்க்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் காவேரி இல்லத்திற்கு வந்தனர்.
ஆனால் அவர், தனக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், யாரையும் சந்திக்க இயலாது என்று கூறி, திருப்பி அனுப்பிவிட்டார். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவாளர்கள் சிலரும் சித்தராமையா வீட்டின் அருகில் வந்தனர். அவர்களையும் போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.