‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக `இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் அர் ஜுனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். ஆனால், இந்த முறை வில்லன் இல்லையாம். முதல்முறையாக யுவன்ஷங்கர் ராஜா சிவகார்த்திகேயனுக்கு இசையமைக்க இருக்கிறார். படப்பிடிப்பு பிப்ரவரி 2019-ல் தொடங்கும் என்கிறார்கள்.
இந்த படத்தை முடித்த பிறகு சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக செய்தி வருகிறது. இது முழுக்க முழுக்க பக்கா மாஸ் அதிரடி ஆக்ஷன் படமாக இருக்குமாம்.