X

சிம்பு படத்தில் இணைந்த யோகி பாபு

பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சுந்தர்.சி படத்தை இயக்க சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணீதா வேடத்தில் கேத்தரீன் தெரசா நடிக்கிறார். நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிட்டிப்பு கடந்த 17ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில நாட்கள் பிரேக் விடப்பட்டது. அந்தச் சமயத்தில் தான் ‘பிக் பாஸ்’ பிரபலங்களுடன் இணைந்து தான் நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைப் பார்த்தார் சிம்பு.

படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கியது. இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நேற்று மகத் இணைந்துள்ளார். அதுபோல் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.