ரஜினி படத்தில் இணைந்த சசிகுமார்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. டார்ஜிலிங், டேராடூன், சென்னை, லக்னோவுக்கு பிறகு வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ரஜினியோடு விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, நவாசுதீன் சித்தின் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இதில், சசிகுமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், படக்குழு அதனை உறுதி செய்துள்ளது. படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது.
இப்போது ரஜினி, திரிஷா நடிக்கும் சுவாரசியமான காதல் காட்சிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்குகிறார்கள். ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு நண்பராகவும், திரிஷாவுக்கு அண்ணனாகவும் சசிகுமார் நடிப்பதாக கூறப்படுகிறது.
நேற்று படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் தோன்றினார்.