பாலிவுட் நடிகையுடன் டூயட் பாடப்போகும் சந்தானம்!

சந்தானம் நடிப்பில் தற்போது ‘தில்லுக்கு துட்டு 2’ படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்திற்கு தயாராகி இருக்கிறார் சந்தானம்.

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கும் புதிய படத்தை சர்க்கிள்பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் இந்தியில் வெளியான மாஸ்ட்ரம், த பர்பெக்ட் கேர்ள், லவ் கேம்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விரைவில் இப்படத்தின் தலைப்பும், பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *