சபரிமலை விவகாரம் – சீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது குறித்து நாளை முடிவு

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் கோவிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவில் நடை திறந்தபோது, கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர்.

இதற்கிடையே சபரிமலை தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கவில்லை.

இதற்கிடையே சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது, சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பாக நாளை முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தன.

சபரிமலை விவகாரம் தொடர்பாக இதுவரை 19 மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சில ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools