ரோகித் சர்மாவை வீழ்த்த ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் வகுத்திருக்கும் வியூகம்!
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா 2018-ல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் நினைக்கிறார்கள்.
பொதுவாக ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், வேகம் இருக்கும். ரோகித் சர்மா எந்தவொரு ஆடுகளத்திலும் ஷாட்டாக பந்தை வீசினால் புல் ஷாட் அல்லது குக் ஷாட் அடித்துவிடுவார். அப்படிபட்டவருக்கு ஆஸ்திரேலியா ஆடுகளம் சிறப்பாக இருக்கும்.
இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவை வலுக்கட்டாயமாக புல், குக் ஷாட் அடிக்க அவரது ஆசையை தூண்டுவோம் என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர்-நைல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவுல்டர்-நைல் கூறுகையில் ”ரோகித் சர்மா நம்ப வியக்கத்தக்க வீரர். உலகின் எல்லா இடங்களிலும் சிறந்த சாதனையை படைத்துள்ளார். ஆகவே, கவனிக்கப்பட வேண்டிய வீரர்களில் ஒருவர் ரோகித் சர்மா. ஆனால், நாங்கள் புதிய பந்தில் அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.
நாங்கள் இந்தியாவிற்கு எதிராக கடைசியாக விளையாடும்போது வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரென்டோர்ப் ரோகித் சர்மாவை வீழ்த்தியிருக்கிறார். அப்போது பந்தை ரோகித் சர்மாவின் கால் பேடு (Pad) அருகில் பிட்ச் செ்யதார். ஆகவே, நாங்கள் அதேபாணியில் குறிவைத்து மீண்டும் ரோகித் சர்மாவை தாக்குவோம்.
ஆஸ்திரேலியாவில் பவுண்டரி லைன் மிகப்பெரியது. ஆகவே, வலுக்கட்டாயமாக ரோகித் சர்மாவை புல் ஷாட், குக் ஷாட் அடிக்க அவரது ஆசையை தூண்டும் வகையில் பந்து வீச முயற்சி செய்வோம். ஜேசன் பெரென்டோர்ப் சிறந்த தொடக்க நிலை பந்து வீச்சாளர் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அவர் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்வார்.
இன்று சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதே சூழ்நிலை 21-ந்தேதி நிலவும் என்று நம்புகிறோம். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.” என்றார்.