ஆர் ஜே பாலாஜி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘எல்.கே.ஜி’. இயக்குனர் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். பிரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்தக் கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட இருப்பதாக அறிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஆர்ஜே பாலாஜி. அந்த போஸ்டரில் அவரைச் சுற்றி இலவச ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி மற்றும் இலவச அரிசி ஆகியவை இருக்கிறது. அவை அனைத்திலுமே ஆர்.ஜே.பாலாஜியின் ஸ்டிக்கர் இடம்பெற்றிருக்கிறது. மேலும் அந்த போஸ்டரில் இலவச வேட்டி சேலையுடன் பொங்கலுக்கு வர்றோம் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்டரிலேயே இலவசங்களை விமர்சித்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. மேலும், மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளே, பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்றும் கூறியிருக்கிறார்.