ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க போராட்டம் – 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
நீண்ட நாட்களாக ஜெயிலில் தவிக்கும் அவர்களை விடுதலை செய்ய கோரி காங்கயத்தில் புரட்சிகர முன்னணி சார்பில் கவர்னர் பன்வாரிலாலுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
காங்கயம், வெள்ளகோவில், நத்தகாடையூர் பகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் இதில் பங்கேற்று கவர்னருக்கு மனு அனுப்பினார்கள்.
புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகி திருநாவுக்கரசு தலைமையில் இந்த மனு அனுப்பப்பட்டது. காங்கயம் தபால் நிலையத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. நிர்வாகிகள் குழுக்களாக பிரிந்து வந்து மனுக்களை அனுப்பினார்கள்.