பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கல்யாண் நகரில் பின்னலாடை தொழிற்சாலை உள்ளது. இங்கு இன்று அதிகாலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணி செய்துகொண்டிருந்தபோது ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னர் அது மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. ஏராளமான துணி மூட்டைகள் பற்றி எரிந்தன. இதன் காரணமாக எழுந்த கரும்புகை மூட்டம் அந்த பகுதி முழுவதும் பரவியது.
தீ பிடித்ததும் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஒரு சில தொழிலாளர்கள் புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் உள்ளே சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பல லட்சம் மதிப்பிலான ஆடைகள் எரிந்து சாம்பலாகின.