X

புரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்திய யு மும்பா

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் அரியானா மாநிலம் சோனிபட்அரியாடில் நடந்த லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியும் யு மும்பா அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியினர் சிறப்பாக விளையாடினர். ஆனாலும், சுதாரித்துக் கொண்ட யு மும்பா அணியினர் முதல் பாதியில் 24 -13 என்ற புள்ளியில் முன்னிலை வகித்தனர்.

யு மும்பா அணியின் சித்தார்த் தேசய் 15 ரெய்டு பாய்ண்ட் எடுத்தார். இதனால் யு மும்பா அணி 42 -32 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அரியானா அணிக்கு இது 5-வது தோல்வியாகும். யு மும்பா அணிக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.