Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – அரியானாவை வீழ்த்தி டெல்லி வெற்றி

12 அணிகள் இடையிலான 6-வது புரொரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்றிரவு நடந்த 52-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) தபாங் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணிக்கு இது 8-வது தோல்வியாகும். மற்றொரு ஆட்டத்தில் (பி பிரிவு) பெங்களூரு புல்ஸ் அணி 37-27 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவை வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது.

மும்பையில் இன்று நடக்கும் லீக் ஆட்டங்களில் யு மும்பா (மும்பை அணி)- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8 மணி), பெங்கால் வாரியர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 9 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *