வீரர்களுடன் மனைவிகளும் தங்க வேண்டும்! – கோலியின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ

வெளிநாட்டு தொடர்களின்போது வீரர்கள் மனைவியர், தோழிகளை உடன் அழைத்து செல்வது வழக்கம். ஆனால் குடும்பங்களுடன் வீரர்கள் இருப்பது, ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக பிசிசிஐ சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொடர்களின்போது 2 வாரங்களுக்கு மேல் வீரர்களின் மனைவியர் அவர்களுடன் தங்கக்கூடாது என்பது பிசிசிஐ நிலையாக உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு தொடர்களின்போது மனைவியர் அல்லது தோழிகளை தொடர் முழுவதும் வீரர்களுடன் தங்க அனுமதிக்குமாறு விதிகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அப்போது, மனைவியர் மற்றும் தோழிகள் வீரர்களின் ஆட்டத்திறன் மேம்பட உதவிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் சப்போர்ட் சிஸ்டம் மாதிரி செயல்படுகிறார்கள். அவர்களால் ஒருபோதும் ஆட்டம் பாதிக்காது என்பதை வலியுறுத்தியிருந்தார்.

உச்சநீதிமன்றம் வினோத் ராய் தலைமையில் அமைத்த பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் விராட் கோலியின் வேண்டுகோளை நிராகரித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு தொடர் முடியும் வரை வீரர்களுடன் அவர்களது மனைவியர் அல்லது தோழிகள் தங்க அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், தொடர் தொடங்கும் முதல் 10 நாட்கள் வீரர்கள் அவர்களை அழைத்துச் செல்லக்கூடாது. அதன்பின் தொடர் முடியும் வரை தங்கிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools