Tamilசெய்திகள்

பெட்ரோல் விலையை விட அதிகமான டீசல் விலை!

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தினமும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல் டீசல் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்த முடியாதபடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து சில நாட்கள் ஏறுவதும், இடையில் ஒருசில நாட்கள் இறங்குவதுமாக உள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வரியைப் பொருத்து விலை மாறுபடுகிறது. பொதுவாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை சற்று குறைவாக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒடிசா மாநிலத்தில்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தில் நேற்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் டீசல் ஒரு லிட்டர் அதைவிட 13 காசுகள் அதிகமாக, அதாவது ரூ.80.78க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ஐந்தாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் குறைந்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.81.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 27 காசுகள் குறைந்து ரூ.74.92க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் ரூ.86.91க்கும், டீசல் ரூ.78.54க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தா மற்றும் சென்னையில் பெட்ரோல் ரூ.83.29-க்கும்,டீசல் ரூ.84.64-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *