பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் – 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன ஆஸ்திரேலியா
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணியின் பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், மார்னஸ் லபுஷங்கே 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 39 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 34 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணி 50.4 ஓவரில் 145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், பிலால் ஆசிப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. பகர் சமான் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். அசார் அலி 54 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.