X

இணையத்தில் வைரலாகும் ரியல்மி யு1 போனின் சிறப்பம்சங்கள்!

ஒப்போ துணை பிராண்டான ரியல்மி இந்தியாவில் அடுத்த வாரம் யு1 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. நவம்பர் 28ம் தேதி புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

அதன்படி புதிய ரியல்மி யு1 ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD பிளஸ் டிஸ்ப்ளே, 13 எம்.பி. + 2 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சென்சார், 25 எம்.பி. செல்ஃபி கேமரா, 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

ரியல்மி யு1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2350×1080 பிக்சல் 19.5:9 ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
– ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 12 என்.எம். பிராசஸர்
– 900MHz ARM மாலி-G72 MP3 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரிய கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
– 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரியல்மி யு1 ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்டவை சில தினங்களில் தெரியவரும். முன்னதாக ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.