ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்ய அரசு முடிவு!

மகாராஷ்டிராவில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவு விபத்துகள் நடக்கின்றன. பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க ஆன்லைனில் மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், ‘பொதுமக்கள் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விரும்புகிறோம். மதுபானங்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டால் அது மதுகுடிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றார். எனினும் அவர் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து கூற மறுத்துவிட்டார்.

இது குறித்து கலால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து மாநிலத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ.15 ஆயிரத்து 343 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி குறைப்பினாலும் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஆன்-லைனில் மதுபான விற்பனைக்கு அனுமதி அளித்தால் அதிக வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools