X

ஒருநாள் கிரிக்கெட் – ஜிம்பாப்வேவை வீழ்த்திய வங்காளதேசம்

ஜிம்பாப்வே அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

டாக்காவில் நேற்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின

டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இம்ருல் காயேஸ் சிறப்பாக ஆடினார். அவர் 144 ரன்கள் அடித்தார், மொகமது சைபுதின் அரை சதமடித்தார்.

மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது.

ஜிம்பாப்வே அணி சார்பில் கைல் ஜார்விஸ் 4 விக்கெட்டும், சதாரா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. அந்த அணியின் சீன் வில்லியம்ஸ் அரை சதமடித்தார். அவருக்கு யாரும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கைல் ஜார்விஸ் 37 ரன்களும், செபாஸ் சுவாயோ 35 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 243 ரன்கள் மட்டுமே எடுத்து, 28 ர்ன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வங்காளதேசம் அணி சார்பில் மெஹிடி ஹசன் 3 விக்கெட்டும், நஸ்புல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக இம்ருல் காயஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி 24-ம் தேதி நடைபெறுகிறது.

Tags: sports news