யாவரும் நலம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நீது சந்திரா. தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, ஆதி பகவன் படங்களில் நடித்தவர் அந்த படங்கள் சரியாக போகாததால் ஒரு பாடலுக்கு ஆடும் நிலைக்கு ஆளானார்.
சிங்கம் 3 படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் சிலகாலம் ஒரு பாடலுக்கு ஆடுவதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் மீண்டும் நடிப்பதற்கு வந்துள்ளார். இனிமேல் ஒரு பாடலுக்கு ஆடாமல் நடிகையாக தன்னை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக ஹாலிவுட்டின் முக்கியமான நடிப்பு ஆசிரியர் டாம் டிரேபரிடம் நடிப்புக் கலையை கற்று வருகிறார்.
தனது நடிப்புத்திறனை காட்டும் வகையில் ரேகா பரத்வாஜ் இயக்கும் ‘ஹு மெய்ன் துமாரி’ என்கிற இசை ஆல்பத்தில் நடிக்கிறார். இனி நடிப்பதற்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளார்.