Tamilசெய்திகள்

நாப்டா ஒப்பந்தத்தில் மாற்றம் – அமெரிக்கா, கனடா இடையே உடன்பாடு

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிடையே தடையில்லா வர்த்தகம் மூலம் பொருளாதார வளர்ச்சி பெறுவதற்காக கடந்த 1994ம் ஆண்டு ‘வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ (நாப்டா) அமல்படுத்தப்பட்டது.

ஆனால் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின் இந்த வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்தார். மிக மோசமான ஒப்பந்தங்களில் இதுவும் என்று என கூறிய அவர், தற்போதையை சூழலில் நாப்டா ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கு எந்த நன்மையும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனக்கு திருப்தியளிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் நாப்டா ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என டிரம்ப் அறிவித்தார்.

இதையடுத்து மூன்று நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நீண்டது. அதன்பின்னர் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் (ஞாயிறு) கனடா புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், தவறினால் இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படும் என்றும் டிரம்ப் கெடு விதித்தார். அதன்பின்னர் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்போம் என்றும் கூறினார்.

இந்த கேடு முடிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் நேற்று இரவு அமைச்சரவை அவசரமாக கூடி இதுபற்றி ஆலோசித்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கனடாவின் நலன்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஒப்பந்தத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம் வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை சீர்திருத்தம் செய்வது தொடர்பான கனடா மற்றும் அமெரிக்கா குழுவினரிடையே இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கனடா ஊடகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் கூட்டாக அறிக்கை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நாப்டா ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட பிரிவுகளில் உடன்பாடு ஏற்பட்டிருப்பதாக மற்றொரு கனடா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவின் பாதுகாக்கப்பட்ட பால் சந்தையை அமெரிக்க அதிக அளவில் அணுகுவதற்கு புதிய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *