பாடகரான நடிகர் மொட்டை ராஜேந்திரன்
பாலா இயக்கத்தில் வெளியான ‘நான் கடவுள்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ராஜேந்திரன். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது. இப்படத்தின் மூலம் சிறந்த வில்லனாக பெயர் பெற்றார்.
ஆனால், இதன்பின் வெளியான ‘ராஜா ராணி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘திருடன் போலீஸ்’, ‘டார்லிங்’ படங்களில் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். காமெடி வேடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஸ்ரீநாத் இசையில் உருவாகும் ஒரு படத்திற்கு மொட்டை ராஜேந்திரன் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.