மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரக பாதை நோய்த்தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர் இன்று காலையில் வீடு திரும்புவார் எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று காலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
வலது தொடையில் இருந்த கட்டி சிறிய அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும், இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.