எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, 1,775 கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த முடிவு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இதுவரை 1,457 கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள கைதிகள் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை வட்டாரம் கூறியது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட 23 கைதிகளில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.