இந்தியா – ஜப்பான் இடையிலான, 13-வது ஆண்டு மாநாடு, இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி, ஜப்பான் சென்றுள்ளார். டோக்கியோ நகரில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
தீபாவளி வெளிச்சம் போல் இந்தியர்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறார்கள்.
டிஜிட்டல் கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை இந்தியா ஏற்படுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். உலக அடையாளமாக மாறியுள்ள ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளும் பொருட்களை தயாரிக்கின்றன என்று கூறினார்.
இந்துக்களோ, புத்த மதத்தை சேர்ந்தவர்களோ நமக்கு ஒன்று தான். இந்துக்கடவுள்களை ஜப்பானியர்கள் வணங்குகின்றனர். சேவை என்ற சொல் ஜப்பானிலும், இந்தியாவிலும் ஒன்று தான்.