‘பேட்ட’ படத்தில் இணைந்த இயக்குநர் மகேந்திரன்!
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் பேட்ட. ரஜினியுடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சசிகுமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வாரணாசியில் நடந்து வருகிறது. சமீபத்தில் ரஜினி – திரிஷா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்கியதாகவும், சசிகுமார் ரஜினியின் நண்பராக நடிப்பதாகவும் முன்னதாக பார்த்திருந்தோம். இந்த நிலையில், பேட்ட படத்தில் ரஜினிக்கு பிடித்த பிரபல இயக்குநர் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் ரஜினி முறுக்கு மீசை, தாடியுடன் வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.