மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள்! – பிரதமர் மோடி, ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை

நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடிய மாமனிதர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2 (இன்று) காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை பிரதமர் மோடி காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களும் மரியாதை செலுத்தினர்

மேலும் பல்வேறு கட்சி தலைவர்களும் பலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools