மகாத்மா காந்தி பிறந்தநாள் – முதல்வர், துணை முதல்வர் மலர் தூவி மரியாதை
தேசத் தந்தையான மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் அவரது சிலைக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள். காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி அடிகளின் சிலைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.