X

கீர்த்தி சுரேஷை பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

சண்டக்கோழி 2, சர்கார் என 2 படங்களில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார்.

இதுகுறித்து கேட்டபோது ‘இரண்டு படங்களில் நாங்கள் இணைந்து நடித்தாலும் இரண்டிலுமே எங்களுக்கு இணைந்து தோன்றும் காட்சிகள் இல்லை. கீர்த்தி சுரேஷ் மிக சிறந்த நடிகை.

இன்னும் பல உயரங்களை தொடுவார். சண்டக்கோழி 2 படத்தில் ராஜ்கிரணோடு நடித்தபோது அவர் என்னை பார்த்து உன்னை பார்த்தால் வில்லி மாதிரியே தோன்றவில்லை. கல்லூரி மாணவி போல இருக்கிறாய் என்றார். இதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஆனது. எடையை கூட்டி பார்க்க பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன்.