Tamilவிளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி தான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி – ஜெயவர்தனே

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றியது.

இலங்கை அணி தொடக்க சுற்றோடு வெளியேறிய நிலையில் பாகிஸ்தான், அப்கானிஸ்தான் ‘சூப்பர் 4’ சுற்றோடு வெளியேறியது. ஆசிய அணிகளில் இந்தியாதான் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பேலன்ஸ் கொண்ட அணி என இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், பேட்ஸ்மேனும் ஆன மகேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயவர்தனே கூறுகையில் “இந்திய ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருந்தது. அவர்களின் வெளிப்பாடு கேப்பையை வெல்ல தகுதியுடையதாக இருந்தது. ஆனால், நாம் எதிர்பார்த்ததை விட ஏராளமான போட்டிகள் மிகவும் நெருக்கமாக வந்து பரபரப்பு ஏற்படுத்தின.

வங்காள தேச அணி தமிம் இக்பால் மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்கள் இல்லாமல் விளையாடியது. அவர்கள் வங்காள தேசத்திற்கு தலை நிமிர்ந்து செல்ல முடியும். எனினும், நல்ல தொடக்க கிடைத்தும் வெற்றி பெற முடியாமல் போனதே என்ற பெரிய ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கும்.

வங்காள தேசம் 260 ரன்களுக்கும் மேல் அடித்திருக்க வேண்டும். ஆனால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். அதை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

மிக்க மகிழ்ச்சியோடு இந்தியா சொந்த நாடு திரும்பும். புதிய வீரர்கள் மற்றும் புதிய கம்பினேசன்களை இந்த தொடர் செய்து பார்த்தார்கள். ஆனால் உலகக்கோப்பைக்கு அவர்கள் தயார் ஆகி வருவதை காட்டியது. ஆசிய கிரிக்கெட் அணிகளில் இந்தியாதான் மிகவும் பேலன்ஸ் கொண்ட அணி.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *