பாலியல் தொல்லை பற்றி தைரியமாக பேச வேண்டும் – நடிகை ஜனனி
’பிக் பாஸ்’ சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனனி, பாலியல் தொல்லை குறித்து பெண்கள் தைரியமாக பேச வேண்டும், என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய ஜனனி, “பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, எப்போது வெளியில் சென்று பொது மக்களை பார்க்க போகிறோம் என்று ஏங்கினேன். வெளியில் வந்தவுடன் மக்களை பார்க்கும் போது நம்ப முடியாமல் இருந்தது. வெளியில் இருக்கும் போது நிறைய விஷயங்கள், உணவுகளை அலட்சியம் செய்திருக்கிறோம். ஆனால், அங்கு ஒரு கேக் இருந்தால் கூட அடித்துக் கொண்டு சாப்பிட்டிருக்கிறோம். ஒவ்வொன்றும் ஏங்கி ஏங்கிதான் கிடைத்திருக்கிறது. சாப்பாட்டின் அருமை பிக்பாஸ் வீட்டில்தான் தெரிந்தது.
என் குடும்பத்தை நான் மிகவும் மிஸ் செய்தேன். போனை தான் மிகவும் மிஸ் பண்ணுவேன் என்று நினைத்தேன். ஆனால், அப்படி நடக்க வில்லை.
எல்லாத்துறையிலும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. ஆனால், அதைப்பற்றி நிறையபேர் தைரியமாக சொல்கிறார்கள். அது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இது சரியான நேரம். இப்போ பேச வில்லை என்றால், நிறைய விஷயங்கள் வெளியில் வராது.” என்று தெரிவித்துள்ளார்.