Tamilவிளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து – புனேவை வீழ்த்திய கோவா

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கோவா நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறிய 21-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா- புனே சிட்டி அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து கோவா பக்கமே கணிசமான நேரம் (62 சதவீதம்) சுற்றி வந்தது. முதல் பாதி நேரத்திற்குள் கோவா அணியில் பெர்ரன் கோரோமினாஸ் (5, 35-வது நிமிடம்), ஹூகோ போமஸ் (12-வது நிமிடம்), ஜாக்கிசந்த் சிங் (20-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். மார்சிலோ பெரீரா (8-வது நிமிடம்), எமிலியானோ ஆல்பரோ (23-வது நிமிடம்) ஆகியோர் புனே அணிக்காக பந்தை வலைக்குள் அனுப்பினர். ஆனால் பிற்பாதியில் யாரும் கோல் போடவில்லை.

இறுதி கட்டத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட நட்சத்திர வீரர் பெர்ரன் கோரோமினாஸ் (கோவா), டியாகோ கார்லஸ் (புனே) ஆகியோர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

முடிவில் கோவா அணி 4-2 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்தது. 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 3 வெற்றி, ஒரு டிரா என்று 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. புனே அணிக்கு இது 3-வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *