Tamilசினிமா

சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான ‘வட சென்னை’

வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `வடசென்னை’.

வெற்றிமாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவான், ராதா ரவி, சுப்ரமணியன் சிவா, சீனு மோகன், டேனியல் அனி போப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மூன்று பாகங்களாக உருவாகும் வடசென்னை படத்தின் முதல் பாகத்திற்கான புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் வெளியான டீசர் மற்றும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் நடைபெற உள்ள பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் வட சென்னை படம் திரையிடப்பட இருக்கிறது. பிங்யோ சர்வதேச திரைப்பட விழா வருகிற 11-ஆம் தேதி துவங்கி 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *