மாயமான இந்தோனேசியா விமானம் கடலில் விழுந்தது!

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் இருந்து லயன் ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை 6.20 மணியளவில் பங்க்கால் பினாங் தீவுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்டு நடுவானில் பறக்கத் தொடங்கிய 13வது நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கினர். விமானத்தில் பயணிகள் விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் இருக்கைகள் உள்ளிட்ட பாகங்கள் ஜாவா கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools