இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் மாற்றம்

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இதன் 2-வது ஒரு நாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற 24-ந்தேதி நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால் இலவச டிக்கெட்டுகள் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், மத்திய பிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி மைதானத்தின் ஒவ்வொரு பிரிவிலும் 10 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு வழங்க முடியும். ஆனால் இது போதாது என்று வாதிட்ட மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கம், கூடுதலாக டிக்கெட்டுகள் தராவிட்டால் போட்டியை நடத்தமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறியது.

இந்த நிலையில் இந்தூரில் நடக்க இருந்த 2-வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news