வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.
எம்.எஸ்.டோனி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 331 போட்டிகளில் விளையாடி 10,173 ரன்கள் குவித்துள்ளார். இதில், ஆசிய அணிக்காக அவர் எடுத்த 174 ரன்களும் அடங்கும். இதன்மூலம் அவர் இந்திய அணிக்காக மட்டும் தற்போது 9,999 ரன்களில் உள்ளார்.
இன்றைய போட்டியில் அவர் 1 ரன் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 10,000 ரன்களை கடக்கும் 5-ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்த மைல் கல்லை டோனி எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.