இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி: இந்தியா பேட்டிங்
ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் தொடங்கியது. கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமநிலையில் உள்ளது. ரோகித் சர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, லோகேஷ் ராகுல், மனீஷ் பாண்டே, டோனி, ரிஷப் பண்ட் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர்.
பந்துவீச்சிலும் முகமது சமி, குல்தீப் யாதவ், சாகல், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் உள்ளனர்.
முதல் ஒருநாள் போட்டியில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சாமுவேல்ஸ், ஷாய் ஹோப், சுனில் அம்ரீஸ், ஹெட்டிமயர், சந்தர்பால் ஹேம்ராஜ், எவின் லீவிஸ், பாலெஸ் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், கேமர் ரோச், ஜோசப், பிஷூ, ஆஸ்லேநர்ஸ், தாமஸ் ஆகியோர் உள்ளனர்.
இப்போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, ரிஷாப் பான்ட், டோனி, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது கலீல் அகமது.
வெஸ்ட் இண்டீஸ்: சந்தர்பால் ஹேம்ராஜ், கீரன் பவெல், ஷாய் ஹோப், ஹெட்மயர், சாமுவேல்ஸ், ரோவ்மன் பவெல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆஷ்லே நர்ஸ் அல்லது பாபியன் ஆலென், கீமோ பால் அல்லது ஒஷானே தாமஸ் அல்லது அல்ஜாரி ஜோசப், தேவேந்திர பிஷூ, கெமார் ரோச்.
தற்போது : இந்தியா 103-2 (20)