X

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி – 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் 1. ரோகித் சர்மா, 2.தவான், 3. லோகேஷ் ராகுல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பந்த், 6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. சாஹல், 9. குல்தீப் யாதவ், 10, புவனேஸ்வர் குமார், 11. பும்ரா, 12. கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் கலீல் அகமதிற்கு இடம் கிடைக்காது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் குருணால் பாண்டியா அல்லது சாஹல் ஆகியோரின் ஒருவருக்கு இடம் கிடைக்காது.