இந்தியாவின் மிக அதிவேக ரயில் – சென்னையில் தயாரிக்கப்பட்டது
இந்தியாவின் மிக அதிவேக ரயிலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ’ட்ரெயின் 18’ என்ஜின் இல்லாமல் இயங்கக்கூடியது. நாட்டின் அதிவேக ரயிலான சதாப்தி விரைவு ரயிலின் சாதனையை முறியடித்து, அதனை விட 15 சதவிகிதம் பயண நேரம் குறைவாக்க கூடிய என்ஜின் இல்லாமல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் இந்த ரயில் இந்தியாவின் அதிவேக ரயிலாகும். சதாப்தி விரைவு ரயிலோடு ஒப்பிடும்போது பயண நேரம் 15% குறைவாக இருக்கும்.
இந்த ‘ட்ரெய்ன் 18’ சென்னையில் தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. 100 கோடி ரூபாய் செலவில் சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டது. இந்த அதிவேக ரயிலின் அறிமுக விழா பெரம்பூரில் நடைபெற்றது.
இதுகுறித்து பொறியாளர் உதயகுமார், ‘சென்னையில் சோதனை ஓட்டங்கள் முடிந்தபிறகு இந்த ரயில் நவம்பர் 7-ம் தேதி டெல்லி சென்றடையும். பிறகு மொராதாபாத் – பரேலி இடையிலும், கோடா – சவாய் மதோபூர் இடையிலும் சோதனை ஓட்டங்கள் நடைபெறும்’ என கூறியுள்ளார்.