ஐதராபாத் விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டாக்களுடன் வந்த இத்தாலி தொழிலதிபர் கைது
இத்தாலியைச் சேர்ந்த தொழிலதிபர் நிகோல் சங்கர்மனோ என்பவரின் லக்கேஜை சோதனையிட்டபோது, அதில் பயன்படுத்தப்படாமல் உயிர்ப்புடன் 22 தோட்டாக்களும், பயன்படுத்தப்பட்ட 3 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் ஆயுத தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.
விசாரணையில் அவர் அபுதாபியில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்துவருவதும், விஜயவாடாவில் சமீபத்தில் நடைபெற்ற படகுப் போட்டியை பார்க்க வந்திருந்ததும் தெரியவந்தது.
மேலும், தன் மகன் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பதாகவும், தன்னுடன் வந்திருந்த மகன் முன்கூட்டியே சென்றபோது, தோட்டாக்களை தனது பேக்கில் விட்டுச் சென்றதாகவும் நிகோல் கூறியுள்ளார்.