X

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் புது படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் 4 ஆம் தேதி ரிலீஸ்

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் `மீசைய முறுக்கு’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தையும் சுந்தர்.சியே தயாரிக்கிறார். இந்த படத்தில் ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார்.

இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இந்த படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி நட்பு, காதல், குடும்பம் என அனைத்து கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை அடுத்த வருட துவக்கத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.