ஹர்திக் பாண்டியா இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவாக இருக்கும் – மைக் ஹசி
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் மாதம் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவிற்கு ஆசிய கோப்பை டி20 தொடரின்போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
அதில் தற்போது ஆஸ்திரேலியா தொடர் வரை ஹர்திக் பாண்டியா இந்த அணியில் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலியா சூழ்நிலயில் ஹர்திக் பாண்டியா ஆட்டம் சூப்பராக எடுபடும். இந்த நிலையில் அவர் இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக் ஹசி கூறுகையில் ‘‘ஹர்திக் பாண்டியா மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவரது விளையாட்டு ஸ்டைல் ஆஸ்திரேலியாவின் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருக்கும். வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவால் அணி சிறப்பான பேலன்ஸ் பெறும். அவர் இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்றார்.