X

கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆயுத பூஜை வாழ்த்து

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

தீய சக்திகளை நல்ல சக்திகள் வெற்றி பெற்றதை அடையாளப்படுத்தும் நாளாக ஆயுதபூஜை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த உவகையோடும், மகிழ்ச்சி பெருக்கோடும் கொண்டாடப்படுகிறது. இந்த மங்களகரமான திருநாளில் தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிலில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற வகையில் இந்த பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாம் உண்மையும், நற்பண்புகளும், நேர்மையும் நிலைநிறுத்தி இதுவரை இல்லாத அளவில் நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.