X

மது போதையில் கார் ஓட்டிய விவகாரம் – நடிகை காயத்ரி ரகுராம் விளக்கம்

நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் குடிபோதையில் கார் ஓட்டி அடையாறு போக்குவரத்து போலீசாரிடம் சிக்கியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்த போலி செய்தியை உருவாக்கியது குடித்துவிட்டு கார் ஓட்டி சிக்கிய நிருபர் தான். நான் படப்பிடிப்பு முடித்துவிட்டு என் சக கலைஞரை வீட்டில் விடச் சென்றேன்.

வழக்கமான பரிசோதனைக்காக என் காரை நிறுத்தினார்கள். நான் போலீசாருடன் மோதவில்லை.

ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள் வேறு பையில் இருந்தது. அதனால் அந்த ஆவணங்களை சரிபார்க்க போக்குவரத்து போலீசார் என்னுடன் வந்தார். அவர்களின் பணியை பாராட்டுகிறேன். சண்டை எதுவும் இல்லை.

அவர் என் தந்தை பற்றி பேசினார், அவர் என் ரசிகர் அதனால் நாங்கள் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டோம். நான் காரை ஓட்டினேன். நான் குடிபோதையில் இருந்திருந்தால் அவர்கள் மீண்டும் என்னை காரை ஓட்ட விட்டிருக்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.